R.N.Singh PT Desk
தமிழ்நாடு

மதுரை ரயில் தீ விபத்துக்கு காரணம் இதுதான்- ஆர்.என்.சிங் பேட்டி

ரயிலில் தீப்பற்றக்கூடிய பொருட்களை மறைத்து வைத்திருந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது என தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.

webteam

மதுரை ரயில் தீ விபத்து குறித்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்த பின்னர் தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "ரயிலில் தீ விபத்து நடந்தது எப்படி? இனி வரும் காலங்களில் இது போன்ற விபத்துகளை தடுப்பது எப்படி என்பது குறித்து ஆய்வு செய்தோம்.

RN.Singh

தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு வந்ததில் சட்ட விதிமீறல் நடந்துள்ளது. லக்னோவில் இருந்தே அவற்றை மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளனர். கழிப்பறையில் கூட இந்த பொருட்களை மறைத்து வைத்துள்ளனர். சுற்றுலா ஏஜென்சி செய்த விதிமீறல்களை பயணிகளும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். குற்றவாளிகளான தனியார் டிராவல் ஏஜென்சி நிறுவனம் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விபத்திற்கு பயணிகள் காரணமல்ல. முழு பொறுப்பும் டிராவல் ஏஜென்சியையே சேரும். அந்த ஏஜென்சிக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சுற்றுலா பெட்டிகளை நாங்கள் அவ்வப்போது பரிசோதனை செய்வது வழக்கம். அப்படி சில சமயங்களில் சிலிண்டர் உள்ளிட்டவைகளை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்துள்ளோம். இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகளை தடுப்பதற்கு அடிக்கடி திடீர் பரிசோதனைகள் செய்யப்படும்" என்றார்.