தமிழ்நாடு

டிடிவி தினகரன் மீது திமுக ஆர்.கே.நகர் வேட்பாளர் புகார்

webteam

தேர்தல் ஆணையம் அனுமதித்த தொகையைவிட பல மடங்கு கூடுதலாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் செலவழித்த டிடிவி தினகரன் மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தியுள்ளது. 

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த வருடம் டிசம்பர் மாதம் இடைத்தேர்தல் நடைப்பெற்றது. இதில் குக்கர் சின்னத்தில்  சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் வெற்றி பெற்றார்.இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் அனுமதித்த தொகையைவிட பல மடங்கு கூடுதலாக செலவழித்த டிடிவி தினகரன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மருதுகணேஷ், தேர்தல் ஆணைய செலவினப் பார்வையாளரிடம் புகார் மனு அளித்துள்ளார். இடைத்தேர்தலில் ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 28 லட்ச ரூபாயை மட்டுமே செலவழிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், டிடிவி தினகரன் பல மடங்கு தொகையை செலவழித்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் செலவின அலுவலரிடம் கணக்கு தாக்கல் செய்துள்ள நிலையில், தினகரன் மீது திமுக வேட்பாளர் மருதுகணேஷ் புகார் அளித்துள்ளார்.