தமிழ்நாடு

கொரட்டூர் ஏரியில் செத்து மிதக்கும் நூற்றுக்கணக்கான மீன்கள்... அப்புறப்படுத்த கோரிக்கை

கொரட்டூர் ஏரியில் செத்து மிதக்கும் நூற்றுக்கணக்கான மீன்கள்... அப்புறப்படுத்த கோரிக்கை

kaleelrahman

கொரட்டூரில் 10 கிலோ அளவிலான 1 டன் மீன்கள் ஏரியில் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

அம்பத்தூர் அருகே கொரட்டூர் ஏரி சுமார் 590 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியை நீர்வள ஆதாரத்துறை பராமரித்து வருகிறது. இந்த ஏரி சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. இந்நிலையில் இன்று காலை நடைபயிற்சி மேற்கொள்வதற்காக பொதுமக்கள் ஏரிக்கு வந்தனர்.

அப்போது ஏரிக்குள் ஆங்காங்கே 10 முதல் 12 கிலோ அளவிலான 1 டன் மீன்கள் ஏரியில் செத்து மிதந்துள்ளன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அம்பத்தூர் மாநகராட்சி மண்டலம்அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் மீன்களை அப்புறப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆகையால் மீன்களை முழுமையாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோடையை பயன்படுத்தி ஏரியை தூர்வார வேண்டும் எனவும் நச்சு கலந்த நீரை வெளியேற்றி நன்னீர் தேக்கி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.