தமிழ்நாடு

தண்ணீர் பிரச்னைக்காக தம்பதியை தாக்கிய ஓய்வுபெற்ற டி.எஸ்.பி. - சிசிடிவி காட்சி

தண்ணீர் பிரச்னைக்காக தம்பதியை தாக்கிய ஓய்வுபெற்ற டி.எஸ்.பி. - சிசிடிவி காட்சி

webteam

சென்னையில் தண்ணீர் பிரச்னை காரணமாக தம்பதியை ஓய்வுபெற்ற டி.எஸ்.பி. தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 

வடபழனி தெற்கு பெருமாள் கோயிலில் 14 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அங்கு வசிப்பவர்கள் தனியார் லாரி மூலம் தண்ணீர் பெற்று பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்தக் குடியிருப்பில் தரைத்தளத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற டி.எஸ்.பி. ராமசாமி என்பவர் லாரி நீருக்கு பணம் தராததுடன் தண்ணீரை வீணடித்தாக கூறப்படுகிறது. 

அதுகுறித்து முதல் தளத்தில் வசிக்கும் ஜியாவுதீன் மற்றும் நஸ்ரின் தம்பதியினர் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. அப்போது அவர்களை ராமசாமி தாக்கியுள்ளார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. 

ஆதாரங்களுடன் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் ராமசாமி மீது இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என ஜியாவுதீன் நஸ்ரின் தம்பதி குற்றம்சாட்டியுள்ளனர்.