தமிழ்நாடு

தமிழகத்தில் குடியரசு தின கொண்டாட்டம்: தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர்

தமிழகத்தில் குடியரசு தின கொண்டாட்டம்: தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர்

webteam

71வது குடியரசு தினத்தையொட்டி சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியை ஏற்றினார்

நாடு முழுவதும் 71வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து சென்னை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே குடியரசு தின விழா நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசிய கொடியை ஏற்றி முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். காவல்துறைக்கான பல்வேறு விருதுகளை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். பின்னர் மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், கிராம கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

குடியரசு தினத்தையொட்டி சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தேசியக் கொடியை பிரதிபலிக்கும் விதமாக, சிவப்பு, வெள்ளை, பச்சை ஆகிய நிறங்களில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதே போன்று, சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் விமான நிலையமும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.