தமிழ்நாடு

பல்கலைக்கழக விழாவில் பாடகி சுசிலாவுக்கு இன்ஸ்பிரேஷன் ஐகான் விருது!

பல்கலைக்கழக விழாவில் பாடகி சுசிலாவுக்கு இன்ஸ்பிரேஷன் ஐகான் விருது!

webteam

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நட்சத்திர கலை விழாவில்  பிரபல பாடகி பத்மபூஷன் சுசிலாவுக்கு இன்ஸ்பிரேஷன் ஐகான் விருது மற்றும் 1 லட்சம் ரூபாய் பண முடிப்பு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பெரம்பலூர் தனியார் கல்லூரியில் வருடந்தோறும் நட்சத்திர கலைவிழா, இன்று பிரம்மாண்டமாக நடந்தது. 3 நாட்கள் நடைபெறும் இந்த நட்சத்திர கலை விழாவில் சினிமா பிரபலங்கள் பங்கேற்று சிறப்பித்து வருகின்றனர். இன்று இரண்டாம் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிகளுக்கு அப்பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்தார். அதில் பிரபல பாடகி பத்மபூஷன் சுசிலாவுக்கு இன்ஸ்பிரேஷன் ஐகான் விருது மற்றும் 1லட்சம் ரூபாய் பணமுடிப்பு வழங்கி கௌரவிக்கப்பட்டது. அடுத்ததாக பெரம்பலூர் எஸ்.எஸ்.எலக்ட்ரானிக்ஸ் சுல்த்தான் இப்ராஹிம்-க்கு Best Social Community & Achiever Award மற்றும் 1 லட்சரூபாய் பணமுடிப்பு வழங்கி கௌரவிக்கப்பட்டது. நலிவடைந்த 700 இஸ்லாமிய குடும்பங்களுக்கு தலா 25ஆயிரம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கி அவர்களது வாழ்வாதார மேம்பாட்டிற்கு உதவியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. 

விருதை பெற்றுக்கொண்ட சுல்தான் இப்ராஹிம் அதே மேடையில் விருது மற்றும் பணமுடிப்பை ஆற்றும் கரங்கள் குழுவிற்கு வழங்கினார். பின்னர் எசனை கிராமத்தை சேர்ந்த பெருமாள் (எ) சுருளிராஜன் என்ற விவசாயிக்கு Change Maker Award மற்றும் 1 லட்ச ரூபாய் பணமுடிப்பு வழங்கி கௌரவிக்கப்பட்டது. திராட்சை மற்றும் ஊட்டி  கொடைக்கானல் போன்ற குளிர் பிரதேசங்களில் பயிரிடக்கூடிய காய்கறிகளை எசனையில் பயிரிட்டு இயற்கை முறையில் விவசாயம் செய்து அசத்தியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. விருது மற்றும் பணமுடிப்புகளை பல்கலை. வேந்தர் சீனிவாசன் வழங்கி பாராட்டினார். கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.