தமிழ்நாடு

’149 சமத்துவபுரங்களில் 14,880 வீடுகள் சீரமைப்பு’ - தமிழக அரசு அரசாணை வெளியீடு

’149 சமத்துவபுரங்களில் 14,880 வீடுகள் சீரமைப்பு’ - தமிழக அரசு அரசாணை வெளியீடு

Veeramani

149 சமத்துவபுரங்களில் 14,880 வீடுகளை பழுதுபார்த்தல், புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சமத்துவபுரங்கள் அவல நிலையில் இருப்பதாகவும்,  அவை விரைவில் சீரமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின்  சட்டமன்றத்தில் அறிவித்த நிலையில், தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 149 சமத்துவபுரங்களில் 14,880 வீடுகளை பழுதுபார்த்தல், புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ 50.04 கோடி திட்ட மதிப்பீட்டில் பெரியார் சிலை பராமரிப்பு, தெரு விளக்கு, சாலை வசதி, நூலகம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.



கடந்த 10 ஆண்டுகளில் சமத்துவபுரங்களில் உட்கட்டமைப்பு பணிகள் ஏதும் நடைபெறவில்லை எனவும், 4 சமத்துவபுரங்கள் 2008-2011 காலக்கட்டத்தில் கட்டப்பட்டு ஒப்படைக்கப்படாமல் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வரும் 5ஆம் தேதி செவ்வாய்க்கிழமை விழுப்புரம் மாவட்டம் வானூரில் சமத்துவபுரம் தொடக்க விழாவிற்கு முதலமைச்சர் செல்ல உள்ள நிலையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.