தமிழ்நாடு

பேருந்து நிறுத்தம் செல்லும் வழியில் உள்ள டாஸ்மாக்கை அகற்றுங்க - 8ஆம் வகுப்பு மாணவி மனு

பேருந்து நிறுத்தம் செல்லும் வழியில் உள்ள டாஸ்மாக்கை அகற்றுங்க - 8ஆம் வகுப்பு மாணவி மனு

kaleelrahman

அரியலூரில் பள்ளிக்கு செல்ல பேருந்து நிறுத்தம் செல்லும் வழியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி 8 ஆம் வகுப்பு மாணவி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

அரியலூர் மாவட்டம் வாரியங்காவல் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன் என்பவரின் மகள் தென்றல். இவர் ஜெயங்கொண்டத்தில் உள்ள பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் பள்ளி செல்ல பேருந்து நிறுத்தம் செல்லும் வழியில் டாஸ்மாக் கடை உள்ளது எனவும் இதனால் பள்ளிக்குச் செல்லவே பயமாக உள்ளது எனவும் எனவே கடையை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்துள்ளார்.

ஆனால், ஆட்சியர் அலுவலகத்தில் மனுவை வாங்க மறுத்ததால் ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே உள்ள பெட்டியில் மனுவை போட்டுவிட்டு மாணவி திரும்பிச் சென்றார்.