மழை pt web
தமிழ்நாடு

வங்கக் கடலில் உருவாகும் 'Remal' புயல்.. இத்தனை மாவட்டங்களில் மழை அலெர்ட்!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

PT WEB

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்ந்து, வடகிழக்கு பகுதியில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் வருகிற 25-ஆம் தேதி தீவிர புயலாக மாறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், வருகிற 26-ஆம் தேதி மாலையில் வங்கதேசத்திற்கு அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வங்கக்கடலில் நாளை மறுநாள் உருவாகும் புயலுக்கு ரிமல் என
பெயரிடப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழ்நாட்டில் வெள்ளிக்கிழமை 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமையன்று கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முழுத் தகவலையும் அறிய இந்த வீடியோவைப் பார்க்கவும்.

இதையும் படிக்க: தலைமை பயிற்சியாளர் பதவிக்கு அணுகிய BCCI.. நிராகரிப்பதற்கு ரிக்கி பாண்டிங் சொன்ன நெகிழ்ச்சி காரணம்!