தமிழ்நாடு

குடமுழுக்கு நடத்த உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் - இந்து சமய அறநிலையத்துறை

குடமுழுக்கு நடத்த உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் - இந்து சமய அறநிலையத்துறை

Veeramani

திருக்கோவில்களில் குடமுழுக்கு நடத்த அனுமதி கோரும்போது உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமென்று இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

குடமுழுக்கு நடத்த வேண்டி மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பப்படும் முன்மொழிவில் உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்படுவதில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதைத் தொடர்ந்து ஆணையர் அளவில் அனுமதி வழங்குவதில் கால தாமதம் ஏற்படுகிறது. எனவே, திருக்கோவில் பெயர், நிலை, தொல்லியல் துறை கருத்துரை வழங்கிய அலுவலரின் பெயர், மண்டல குழு கருத்துரு பெற்ற விவரம், திருப்பணி வேலைகளுக்கான நிர்வாக உத்தரவு எண், மதிப்பீட்டுத் தொகை, செலவுகள் எந்த நிதி மூலம் செய்யப்படுகிறது, என்பவை உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் இணை ஆணையர் சான்றொப்பமிட்ட அதற்கான நகல்கள் அனைத்தும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.