எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி 10 ஆண்டுகள் தண்டனைக் காலத்தை நிறைவு செய்த ஆயுள் கைதிகள் 67 பேர் விடுதலை செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் இன்று புழல் சிறையில் இருந்து அனைவரும் விடுவிக்கப்படுகின்றனர்.
எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி கடந்த பிப்ரவரி 25ஆம் தேதியுடன் 10 ஆண்டுகள் தண்டனைக் காலம் நிறைவு செய்த 67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என தமிழக அரசு அறிவித்தது.அதன்படி சென்னை புழல் சிறையில் இருந்து அவர்கள் இன்று காலை விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சிறைத்துறை மேற்கொண்டு வருவதாகவும் சிறைத்துறை டிஐஜி முருகேசன் தெரிவித்துள்ளார்.