உறவினர்கள் போராட்டம் pt desk
தமிழ்நாடு

சீர்காழி: விபரீத முடிவெடுத்த பெண் - கணவரை கைது செய்யக் கோரி உறவினர்கள் போராட்டம்

webteam

செய்தியாளர்: ஆர்.மோகன்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அகர எலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பிரபு – சுகன்யா தம்பதியர். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை சுகன்யா, தற்கொலை முடிவெடுத்துள்ளார்.

சுகன்யா

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொள்ளிடம் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அங்கு வந்த சுகன்யாவின் உறவினர்கள் சுகன்யாவின் சாவில் மர்மம் இருப்பதாகவும் சுகன்யாவின் கணவர் பிரபுவை கைது செய்த பின்னர்தான் சுகன்யாவின் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் உடற்கூராய்வு செய்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் உறவினர்கள் சீர்காழி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது. தொடர்ந்து சீர்காழி போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.