தாமரங்கோட்டை 100 வயது முதியவர் புதிய தலைமுறை
தமிழ்நாடு

4 தலைமுறைகளை கண்ட முதியவர்.. 100வது பிறந்தநாளை ஊரைக்கூட்டி கொண்டாடிய உறவுகள்!

PT WEB

செய்தியாளர் - I.M.ராஜா 

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள தாமரங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் என்.கே.ஆர்.காத்த வேளாளர். இவர் 100 வயதை எட்டியதைத் தொடர்ந்து இவரது குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து, கிராமத்தினர் மற்றும் நண்பர்கள் உறவினர்களை கூப்பிட்டு பிறந்தநாள் சம்பந்தப்பட்ட (சதாப்தி மகா பிரத்யுஞ்சை சாந்தி) யாகம் நடத்தி கொண்டாடினர்.

தாமரங்கோட்டை 100 வயது முதியவர்

நூறு வயதை கடந்த என்.கே.ஆர்.காத்த வேளாளருக்கு, மூன்று மகன்கள், 4 மகள்கள் என ஏழு பிள்ளைகளும், 11 பேரக்குழந்தைகள், ஏழு கொள்ளு பேரன்கள் உள்ளனர். நான்கு தலைமுறைகளை கண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்துள்ளார் இம்முதியவர். இவரது மனைவி பெயர் ஆவத்தாளம்மாள், இவர் பத்து ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்திருக்கிறார்.

100வது பிறந்தநாளை கொண்டாடிய முதியவர்..

இன்று வரை தன் வேலைகளை தானே சுயமாக பார்த்துக் கொள்ளும் முதியவர் காத்தவேளாளர், சைவ பிரியராம். தனக்கு தேவையான உணவுகளை தானே விறகு அடுப்பிலே சமைத்து சாப்பிடும் இவர், வீட்டை சுற்றி கிடைக்கும் காய்கறிகளையே தனது உணவாக உட்கொண்டு வருகிறார். 100 வயதான இவர் உடல் உபாதைகளுக்காக எந்த வித மருந்துகளும் உட்கொள்ளாமல் இருந்துவருகிறார்.

தாமரங்கோட்டை 100 வயது முதியவர்

இவரது பிறந்தநாள் விழாவில் அப்பகுதி மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு அவரிடம் ஆசி பெற்று சென்றனர். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு தென்னம்பிள்ளை மற்றும் மரச்செடிகள் வழங்கி விருந்தளிக்கப்பட்டுள்ளது.