ரெட் அலர்ட்  புதிய தலைமுறை
தமிழ்நாடு

டிசம்பராக மாறியதா மே மாதம்..? ரெட் அலர்ட்... காட்டு காட்டுனு காட்டப்போகும் மழை!

தேனி, தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

PT WEB

தேனி, தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை

தேனி, தென்காசி, நெல்லை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கன்னியாகுமரி, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.