தமிழ்நாடு

“கஜா புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம்”- சத்ய கோபால்..!

“கஜா புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம்”- சத்ய கோபால்..!

Rasus

கஜா புயலை எதிர்கொள்ள தயார் தயார் நிலையில் இருப்பதாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் நவம்பர் 15-ஆம் தேதி கடலூர்- ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது சென்னைக்கு கிழக்கே 930 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது. புயல் காரணமாக வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தீவிர புயலாக மாறினாலும் கரையை கடக்கும்போது தீவிரம் குறைந்த புயலாக ‘கஜா’ மாறும் என்றும், புயல் கரையை கடக்கும்போது வட கடலோர மாவட்டங்களில் 80-90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 12-ஆம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றவர்கள் நவம்பர் 12-ஆம் தேதிக்குள் அதாவது நாளைக்குள் கரை திரும்ப வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே கஜா புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார். ஆழ்கடல் பகுதிக்கு சென்ற மீனவர்களுக்கு கடலோர பாதுகாப்பு படை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, புயல் தொடர்பாக கடலோர மாவட்ட மக்களுக்கு உரிய நேரத்தில் தகவல் அளித்துக் கொண்டே இருப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.