மார்ச் ஒன்றாம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டுகளுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
பழைய ரேஷன் கார்டுகளை ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றும் பணி 99 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். சென்னையை தவிர பிற மாவட்டங்களில் ஸ்மார்ட் கார்டுகள் விநியோகிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார். மேலும், சென்னையில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் ஸ்மார்ட் கார்டுக்கு தேவையான தகவல்களை அளிக்காததால் பணி நிறைவடைவதில் காலதாமதம் ஏற்படுவதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். பிப்ரவரி 15ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டு, மார்ச் 1ம் தேதி முதல் ரேஷன் பொருட்கள் ஸ்மார்ட் கார்டுகள் மூலமே வழங்கப்படும் என அமைச்சர் கூறினார்.