இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயில் மூன்று நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்டது. வடமாநில பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் கோவிலில் நேரடியாக சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று பக்தர்கள் திருக்கோவிலில் நேரடியாக தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக மூடப்பட்டிருந்த இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் இன்று திறக்கப்பட்டது. இதையடுத்து வட மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர், அதேபோல ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குறைந்த அளவிலான பக்தர்கள் நீராடி வருகின்றனர்,