Boat pt desk
தமிழ்நாடு

ராமநாதபுரம்: கடலில் வீசும் சூறைக்காற்று... கரையில் காத்திருக்கும் படகுகள் - வேலையிழந்த மீனவர்கள்

webteam

செய்தியாளர்: அ.ஆனந்தன்

தெற்கு மன்னார் வளைகுடா மற்றும் வங்கக் கடலில் காற்றின் வேகம் 45 முதல் 55 கிமீ வேகத்திலும், அதிகபட்சமாக 65 கிமீ வேகத்தில் வீசக் கூடும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ராமேஸ்வரம், மண்டபம், கீழக்கரை தொண்டி, சோழியாக்குடி, தேவிபட்டினம் உள்ளிட்ட துறைமுகங்களில் இருந்து நேற்று முதல் மீன்பிடிக்கச் செல்லும் விசைப்படகு மீனவர்களுக்கு அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டு மீன்பிடிக்கச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Boat

இதனால் சுமார் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. மீன்பிடி தடையால் நேரடியாக 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்களும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர். மேலும் இத்தடையால் நாள் ஒன்றுக்கு சுமார் 5 முதல் 7 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மீன்பிடி சார்பு நிறுவனங்களும் பூட்டப்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக தொடரும் மீன்பிடி தடையால் மீன்பிடி தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.