New Pamban bridge pt desk
தமிழ்நாடு

ராமநாதபுரம்: புதிய பாம்பன் ரயில் பாலம் - தண்டவாள அதிர்வுகளை கண்டறியும் பணி தீவிரம்

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் மின்சார ரயில்கள் இயக்க மின் கம்பங்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

webteam

செய்தியாளர்: அ.ஆனந்தன்

பாம்பன் ரயில் பாலம் நூற்றாண்டைக் கடந்ததால் உறுதித்தன்மையை இழந்த விட்டது. இதனால் இந்திய ரயில்வே சார்பில் ரூ.550 கோடி மதிப்பீட்டில் பாம்பன் கடலில் புதிதாக ரயில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதன் 99 சதவீத பணிகள் நிறைவடைந்ததை அடுத்து கடந்த 21 ஆம் தேதி சுமார் 1100 டன் எடை கொண்ட சரக்கு ரயில் 10 முதல் 60 கிமீ வேகத்தில் படிப்படியாக இயக்கி சோதனை செய்யப்பட்டது.

தண்டவாள அதிர்வுகளை கண்டறியும் பணி

இந்நிலையில், பாம்பன் ரயில் செங்குத்து தூக்கு பாலம் வழியாக மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட ரயில்களை இயக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து நூற்றுக்கணக்கான மின் கம்பங்கள் பாம்பன் புதிய பாலத்தின் தண்டவாளத்தின் அருகே நிறுவப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அதில் மின் உயர் மின் அழுத்த கம்பிகள் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதனிடையே பாம்பன் புதிய ரயில் பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள தண்டவாளங்களில் ரயில் செல்லும் போது அதிர்வுகள் ஏற்படும் என்பதால், அந்த அதிர்வுகளை கண்டறிய ஸ்கேனர் மெஷின் பொருத்தப்பட்ட ரயில் இன்ஜினை செங்குத்து தூக்கு பாலம் வழியாக மண்டபம் முதல் பாம்பன் ரயில் நிலையம் வரை இயக்கி சோதனை செய்து வருகின்றனர்.