தமிழ்நாடு

ராமநாதபுரம்: வாழ்க்கையை சிதைப்பதாக நடிகை சாந்தினி மீது முன்னாள் அமைச்சரின் மனைவி புகார்

ராமநாதபுரம்: வாழ்க்கையை சிதைப்பதாக நடிகை சாந்தினி மீது முன்னாள் அமைச்சரின் மனைவி புகார்

kaleelrahman

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி, துணை நடிகை மீது ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தனது குடும்ப வாழ்க்கையை சிதைக்கும் நோக்கத்தோடும், தங்களது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் நோக்கத்தோடும் துணை நடிகை சாந்தினி தனது கணவர் மீது பொய்யான புகார் கொடுத்துள்ளதாகக் கூறி முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி வசந்தி ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். எனவே சாந்தினி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனைவி கொடுத்த புகாரை மதுரை ஐஜி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து அங்கிருந்து சென்னை அடையாறு காவல் நிலையத்திற்கு அனுப்பி, புகாரை விசாரிக்கும்படி பரிந்துரை செய்துள்ளதாக எஸ்பி கார்த்தி தெரிவித்தார்.