Hotel pt desk
தமிழ்நாடு

ராமநாதபுரம்: வாடிக்கையாளர் வாங்கிய மட்டன் பிரியாணியில் புழு இருந்ததாக புகார் - கடைக்கு அபராதம்

ராமநாதபுரத்தில் பிரியாணி கடையில் வாடிக்கையாளர் வாங்கிய மட்டன் பிரியாணியில் புழு இருந்ததாக புகார் எழுந்ததை அடுத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

webteam

செய்தியாளர்: அ.ஆனந்தன்

ராமநாதபுரம் சூரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் ராமநாதபுரம் அரண்மனையில் இயங்கி வரும் மதுரை முனியான்டி விலாஸ் பிரியாணி கடையில் மட்டன் பிரியாணி பார்சல் ஒன்றை வாங்கியுள்ளார். அதை வீட்டிற்கு எடுத்து சென்று சாப்பிட்டுள்ளார். அப்போது அதில் புழு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

Briyani

இதையடுத்து கடைக்காரரிடம் சென்று பிரியாணியில் புழு இருந்தது குறித்து கேட்டுள்ளார். அதற்கு அவர், உரிய விளக்கம் அளிக்காததால் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேரடியாக பிரியாணி கடைக்கு வந்து பிரியாணி மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பியுள்ளார்.

இதைத் தொடர்ந்து பிரியாணியில் புழு இருந்தது தொடர்பாக பிரியாணி கடைக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன் உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.