ADMK protest pt desk
தமிழ்நாடு

ராமநாதபுரம்: ‘எடப்பாடி பழனிசாமியை தரக்குறைவாக பேசுகிறார்...’ - அண்ணாமலையின் உருவ பொம்மை எரிப்பு

ராமநாதபுரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தரக்குறைவாக பேசியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

webteam

செய்தியாளர்: அ.ஆனந்தன்

தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை, தொடர்ந்து விமர்சித்து வருகிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. அதில் நேற்று, “தரையில் தவழ்ந்து சென்று பதவி பெற்றவர் பழனிசாமி” என விமர்சித்திருந்தார். இது அதிமுகவினரை அதிர்ச்சியடையச் செய்தது.

உருவ பொம்மை எரிப்பு

இதனைக் கண்டித்து ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மேற்கு ஒன்றியம் சார்பில் செயலாளர் ஆர்.ஜி.மருது பாண்டியன் தலைமையில் பாரதி நகரில் இன்று அதிமுகவினர் கட்சிக் கொடியுடன் திரண்டு வந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து அண்ணாமலை புகைப்படத்தை அடித்தும், உருவ பொம்மையை எரித்தும் மிதித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் உருவ பொம்மையை கைப்பற்றி தண்ணீர் ஊற்றி அணைத்தனர். அதிமுகவினர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. ‘இனியும் அண்ணாமலை தரம் தாழ்ந்து எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்வதை கைவிடாவிட்டால் அண்ணாமலை செல்லும் இடமெல்லாம் அதிமுக போராட்டம் நடத்தி கருப்புக் கொடி காட்டும்’ என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.