அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்து pt desk
தமிழ்நாடு

ராமநாதபுரம்: அரசு பேருந்து மீது கார் மோதிய கோர விபத்து - ஒரே குடும்பதைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதிய கோர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

webteam

செய்தியாளர்: அ.ஆனந்தன்

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜேஷ் (33) - பாண்டிச் செல்வி (28) தம்பதியர். இவர்கள் தங்களது குழந்தைகளாக தர்ஷினா ராணி (8), பிரணவிகா (4) மற்றும் பிறந்து 12 நாட்களேயான ஆண் குழந்தை ஆகியோருடன் தங்கச்சிமடத்தில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் ஆண் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் ராஜேஷ், தனது குடும்பத்துடன் பாண்டிச் செல்வியின் உறவினர்களான செந்தில் மனோகரன் (70), அங்காளேஸ்வரி (58) ஆகியோரை அழைத்துக் கொண்டு ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். குழந்தைக்கு சரியானபின் அனைவரும் வாடகை காரில் ஊர் திரும்பியுள்ளார்

Car Accident

நேற்று நள்ளிரவு அந்த கார் உச்சிப்புளி அடுத்த பிரப்பன்வலசை அருகே வந்த போது, காருக்கு முன்னால் திருப்பத்தூரில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், ராஜேஷ், அவரது மகன்களான தர்ஷினா ராணி, பிரணவிகா மற்றும் அவரது உறவினர்கள் செந்தில் மனோகரன், அங்காளேஸ்வரி ஆகிய ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கார் ஓட்டுனர் சவரி பிரிட்டோ (35), பாண்டிச்செல்வி மற்றும் அவரது 12 நாள் கைக்குழந்தை ஆகிய மூவரும் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உச்சிப்புளி போலீசார், ஐந்து பேரின் உடல்கள்யும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.