Kamal Haasan pt desk
தமிழ்நாடு

"பதவிக்கான விஷயமே இல்லை; நாட்டுக்கான விஷயம்"- கமல்ஹாசன்

பதவிக்கான விஷயமே இல்லை. நாட்டுக்கான விஷயம் என்பதால் எங்கு கை கொடுக்க வேண்டுமோ அங்கு கொடுத்துள்ளோம் என்று கமல்ஹாசன் பேட்டியளித்தார்.

webteam

செய்தியாளர்: சந்தான குமார்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்தார். இதைத்தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மாநிலங்களவையில் (ராஜ்யசபா) ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

Kamal Haasan

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் 40 தொகுதியிலும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வோம். தி.மு.க. கூட்டணியில் மாநிலங்களவையில் (ராஜ்யசபா) ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை, ஆனால் திமுக கூட்டணிக்கு எங்கள் முழு ஆதரவு இருக்கும். பதவிக்கான விஷயமே இல்லை. நாட்டுக்கான விஷயம் என்பதால் எங்கு கை கொடுக்க வேண்டுமோ அங்கு கொடுத்துள்ளோம் என்றார்.