ரஜினிகாந்த்தின் இலங்கை பயணத்தை எதிர்த்தது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் சிங்கள ராணுவத்திடம் சரணடந்தவர்களின் நிலை என்ன என்பதை அரசு தெரிவிக்க வேண்டும். போரின் போது ஆக்கரமிக்கப்பட்ட தமிழர்களின் நிலங்களை திருப்பி அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் பல்வேறு இடங்களில் போராடி வருகின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்த் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டால் சிங்கள அரசு போராட்டத்தை திசை திருப்பிவிடும். இதனால் உலக அரங்கில் பேசப்படும் இலங்கை தமிழர் பிரச்னை தடைபட்டுவிடும் என்பதால்தான் ரஜினி இலங்கைக்கு செல்ல வேண்டாம் என கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.