தமிழ்நாடு

வேலூர் சிறையில் 3ஆவது நாளாக முருகன் உண்ணாவிரதம்

வேலூர் சிறையில் 3ஆவது நாளாக முருகன் உண்ணாவிரதம்

webteam

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள முருகன் 3ஆவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த மாதத்தில் முருகன் அறையிலிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிறைவிதிகளை மீறியதால் முருகனுக்கு வழங்கப்பட்டு வந்த சிறை சலுகைகள் ரத்துசெய்யப்பட்டு தனிமை சிறைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து சிறைத்துறை வேண்டுமென்றே தன் மீது பழி போடுவதாகக் கூறி முருகன் கடந்த மாதத்தில்‌ 17 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். தொடர்ந்து சிறைத்துறை அதிகாரிகள் ‌பேச்சுவர்த்தை நடத்தியதால் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். 

இந்நிலையில், தனிமைச் சிறையிலிருந்து தன்னை மாற்றக்கோரி சிறைதுறைக்கு மனு அளித்துவிட்டு நேற்று முன்தினம் முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். உண்ணாவிரதம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்தது.