தமிழ்நாடு

ராஜஸ்தான், ஒடிசாவில் பட்டாசு வெடிக்க தடையை நீக்குக: முதல்வர் பழனிச்சாமி கோரிக்கை

ராஜஸ்தான், ஒடிசாவில் பட்டாசு வெடிக்க தடையை நீக்குக: முதல்வர் பழனிச்சாமி கோரிக்கை

sharpana

ஒடிசா மற்றும் ராஜஸ்தானில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கவேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அம்மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா சூழலால் பட்டாசு வெடித்தால், காற்று மாசுபாடு ஏற்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தும் என்று ராஜஸ்தான் மற்றும் ஒடிசா மாநில அரசுகள் பட்டாசு வெடிப்பதை தடை செய்துள்ளன. ஏனென்றால், கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளில் அதிகம் பேர் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுத்தான் உயிரிழக்கிறார்கள்.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி “நாட்டில் தமிழகத்தில்தான் 90 சதவீதம் பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பட்டாசு வெடிக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பட்டாசு உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் பெரிதும் பாதிப்படைவார்கள். காற்று மாசு, ஒலி மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளின்படி தமிழகத்தில் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன.

தமிழகத்தில் பசுமை பட்டாசுகளே அதிகம் உற்பத்தி செய்வதால் சுற்றுச்சூழல் பாதிப்பு பிரச்சனை ஏற்படாது. பட்டாசு தயாரிப்பு தொழிலை நம்பி நேரடியாக 4 லட்சம் பேரும், மறைமுகமாக 4 லட்சம் பேரும் வாழ்ந்து வருகிறார்கள்” என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.