தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் புற்றுநோய்க்கான பெஸ்ட் ஸ்கேன் - தென் இந்திய அளவில் முதல் சாதனை 

அரசு மருத்துவமனையில் புற்றுநோய்க்கான பெஸ்ட் ஸ்கேன் - தென் இந்திய அளவில் முதல் சாதனை 

webteam

தென் இந்தியாவில் முதன்முறையாக மதுரை அரசு மருத்துவமனையில் துவங்கப்பட்டுள்ள பெட் ஸ்கேன் வசதி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 

தென் தமிழக மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்யும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நாள்தோறும் சுமார் 7 ஆயிரம் பேர் வெளி நோயாளிகளாகவும் 3 ஆயிரம் பேர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். ‌இங்கு புற்றுநோய்க்காக மாதந்தோறும் 200 முதல் 300 நோயாளிகள் வரை வரும் நிலையில், புற்றுபாதிப்பை துல்லியமாக கண்டறியும் பெட் ஸ்கேன் சேவையை கடந்த 6ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கிவைத்தார். 

10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்பட்டுள்ள இந்த அதிநவீன பரிசோதனை மையத்தில் துல்லியமான முறையில் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்படுவதால், நோயாளிகளுக்கு வரப்பிரசாதம் என்கிறார்கள் மருத்துவர்கள். 

நுரையீரல், கணையம், எலும்பு மற்றும் மார்பக புற்றுநோய் உள்ளிட்ட அனைத்து வகை புற்றுநோயையும் ஆரம்பத்திலேயே கண்டறிய இந்த ஸ்கேன் உதவும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும் ஒரு மில்லி மீட்டர் அளவிலான புற்றுநோய் கட்டியை கூட 99 சதவீதம் துல்லியமாக கண்டறிய முடியும் என்பதால் தொடர் சிகிச்சைக்கு இந்தப் பரிசோதனை பயனுள்ளதாக அமையும் என்கிறார்கள்.