தமிழ்நாடு

பரிசுத் தொகையை உயர்த்தினால் காணாமல்போன கிளி கிடைக்கும் - மெய்யான ஜோதிடரின் வாக்கு

பரிசுத் தொகையை உயர்த்தினால் காணாமல்போன கிளி கிடைக்கும் - மெய்யான ஜோதிடரின் வாக்கு

webteam

ஜோதிடரின் ஆலோசனையை ஏற்று பரிசுத் தொகை உயர்த்தப்பட்ட அறிவிக்கப்பட்ட சிலமணி நேரத்திலேயே காணாமல் போன கிளி அதன் உரிமையாளரிடம் திரும்பியது.

கர்நாடக மாநிலம் தும்கூரில் ஜூலை 16ஆம் தேதி காணாமல் போன கிளி இறுதியாக அதன் உரிமையாளரிடம் திரும்பியுள்ளது. ஜெயநகரைச் சேர்ந்த ரவி, ரஞ்சிதா தம்பதியினர் தாங்கள் வளர்த்த ருஸ்துமா என்ற கிளி காணாமல் போனதை அடுத்து அவர்கள் தும்கூர் நகரின் தெருக்களில் கிளிகளைத் தேடி அலைந்தனர்.

ஆனால், கண்டுபிடிக்க முடியாததால் கிளியை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என ஆட்டோக்களில் வந்து துண்டு பிரசுரம் வினியோகம் செய்தனர். ஆனாலும், கிளியை கண்டுபிடிக்க முடியவில்லை

இதனால் கிளி உரிமையாளர் ஜோதிடரிடம் சென்று அவரது ஆலோசனையை கேட்டார். அதற்கு ஜோதிடர், பரிசுத் தொகையை 50 ஆயிரத்தில் இருந்து 85 ஆயிரமாக உயர்த்தினால் 5 அல்லது 6 மணி நேரத்தில் கிளி கிடைக்கும் என்று கணித்துள்ளனர். அதன்படி, பரிசுத் தொகை 85 ஆயிரமாக உயர்த்தப்பட்டதாக ரவி தம்பதியினர் அறிவித்தனர். இதையடுத்து பந்தே பாளையம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் மற்றும் ராமகிருஷ்ணா ஆகியோர் பசவபட்டினத்தில் மரத்தில் இருந்த கிளியை மீட்டு வீட்டில் வைத்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து காணாமல் போன கிளியின் விளம்பரங்கள் மற்றும் அடையாளத்தை பார்த்து, கிளியின் உரிமையாளரை அழைத்து கிளியை ஒப்படைத்தார். அவர்களுக்கு பரிசுத் தொகை ரூ. 85 ஆயிரத்தை கிளியின் உரிமையாளர் ரவி வழங்கினார். இத்தனை நாள் கிளி காணாமல் போன சோகத்தில் இருந்த ரவி குடும்பத்தினர் இப்போது மகிழ்ச்சியில் உள்ளனர்.