அரசுப் பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கிய மழைநீர் pt desk
தமிழ்நாடு

தேனி: விடிய விடிய பெய்த கனமழை – ஆண்டிபட்டி அரசுப் பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கிய மழைநீர்

ஆண்டிபட்டியில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம் போல தேங்கியதில் மாணவர்களும் ஆசிரியர்களும் சிரமத்திற்கு ஆளாகினர்.

PT WEB

செய்தியாளர்: மலைச்சாமி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரில் நேற்றிரவு ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த கனமழை காரணமாக மதுரை சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தின் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்களும் ஆசிரியர்களும் குளம் போல் தேங்கியிருந்த மழைநீரில் இறங்கி பள்ளிக்குச் சென்றனர்.

அரசுப் பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கிய மழைநீர்

இது குறித்து ஆண்டிபட்டி பேரூராட்சி அதிகாரிகளிடம் நாம் கேட்ட போது...

அரசுப் பள்ளி வளாகத்தில் தேங்கியிருந்த மழைநீரை மோட்டார்கள் மூலம் உடனடியாக அகற்றிவிட்டதாக தெரிவித்தனர். நோய்த் தொற்று ஏற்படும் முன் மழைநீரை வெளியேற்றி மாணவர்களையும் ஆசிரியர்களையும் காக்க வேண்டுமென ஊர் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.