தமிழ்நாடு

அடுத்த 2 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

அடுத்த 2 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Sinekadhara

அடுத்த 2 மணிநேரத்திற்கு 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக சில இடங்களில் மழைபெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. அதன்படி 18 மாவட்டங்களில் இடியுடன்கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைபெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள கடற்பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் கோவா - கர்நாடக பகுதி தொடங்கி தென் தமிழகம் வரையுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 மணிநேரத்திற்கு மழைபெய்யும் என கூறப்பட்டுள்ளது.

அதன்படி, புதுக்கோட்டை, கோவை, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், கடலூர், சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் லட்சத்தீவு மற்றும் கேரள கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் இன்றும் நாளையும் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கர்நாடக கடலோர பகுதிகளுக்கு இன்றுமட்டும் செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.