தமிழ்நாடு

அரசுப் பேருந்திற்குள் மழை.. குடை பிடித்து பயணித்த பயணிகள்..

Rasus

வால்பாறையில் அரசுப் பேருந்திற்குள் பயணிகள் குடை பிடித்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 56 எஸ்டேட்டுகள் உள்ளன. இவற்றிற்கு வால்பாறை பகுதியில் இருந்து அரசுப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொதுவாக ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை வால்பாறை பகுதியில் மழை பெய்யும். இந்நிலையில் வால்பாறை அருகே ராயன் எஸ்டேட் பகுதிக்கு செல்லும் அரசுப் பேருந்தின் மேல்கூரை உடைந்து காணப்படுவதால், மழைநீர் பேருந்துக்குள் அப்படியே ஒழுகியது.

இதனால் பயணிகள் இருக்கையில் அமர முடியமால் நின்று கொண்டு பயணிக்க வேண்டியுள்ளது. அத்துடன் பேருந்திற்குள் நின்றாலும் குடை பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதுமட்டுமில்லாமல் வால்பறை பகுதிக்கு பழைமையான பேருந்துகளை இயக்கி வருவதால் விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். எனவே பழைய பேருந்துகளை நிறுத்திவிட்டு புதிய பேருந்துகளை பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.