தமிழ்நாடு

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை

Rasus

தமிழகம், புதுச்சேரியில் வரும் 8-ஆம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல், கேரளா மற்றும் கர்நாடகாவில் கனமழை பெய்யும் என்றும், வரும் 7ஆம் தேதி தமிழக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள பகுதிகளில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் பூதலூரில் 10.2 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. மஞ்சளாறில் 6.6 சென்டி மீட்டரும், மதுக்கூரில் 6.2 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மொத்தமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 89.3 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 8.7 சென்டி மீட்டர் மழையும், தலைஞாயிறில் 7.7 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் 3.1 சென்டி மீட்டர் மழையும், சேலம் மாவட்டத்தில் 2.3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. நாகை மாவட்டம் சீர்காழியில் அதிகப்பட்சமாக 8.6 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் தழுதாழையில் 2.9 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.