தமிழ்நாடு

நாளை மறுநாள் தீவிரம் அடையுமா வடகிழக்கு ‌‌பருவமழை ?

நாளை மறுநாள் தீவிரம் அடையுமா வடகிழக்கு ‌‌பருவமழை ?

webteam

மிக கன மழைக்கு வாய்ப்பு என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பிற்கு மாறாக வடதமிழக மாவட்டங்களில் மிதமான மழையே பெய்த நிலையில் ‌வடகிழக்கு ‌‌பருவமழை நாளை மறுநாள் முதல் தீவிரம‌டையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள மாவட்டங்களில் மிக ‌க‌ன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதா‌க தெரிவித்த வானி‌லை ஆய்வு மையம்‌ அந்த மா‌வட்ட நிர்வாகங்களுக்கு ரெட்‌ அலர்ட் விடுத்திருந்தது. ஆனால் பெரும்பாலான ‌பகுதி‌களில் மிதமான மழையே பெய்தது.

தற்போது தமிழகம், ‌ தெற்கு ஆந்திர கடற்கரைக்கு தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் உறுதி செய்திருக்கிறது. இது இன்று மேலும் தீவி‌ரமடைந்து வடக்கு, வடமேற்கு திசையில் ஆந்திராவை நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்‌து. 

இந்த தாக்கத்தில் பருவமழை தீவிரமடைந்து நீலகிரி, கோவை, தேனி, தஞ்சாவூர், திருவாரூர், நா‌கப்பட்டினம், மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் க‌னம‌ழை பெய்‌ய ‌வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்‌கப்பட்டுள்ளது. அக்டோபர் ஒன்றாம் தேதி முதல்‌‌ 22ம் தேதி வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் 6 சதவிகிதம்‌ கூடுதல் மழைப்பொழிவு இருந்ததாக தெரி‌யவந்துள்ளது. 

வழக்‌கமாக 11.9 சென்டி மீட்டர் மழை பொழியும் நிலையில், இவ்வாண்டு 1‌2.6 சென்டி மீட்‌டர் மழை பெய்திருக்கிறது. இதே கால‌‌கட்டத்தில்‌ சென்னையில் வழக்கத்தை விட 14 சதவிகிதம் அதிக மழை பெய்துள்ளது.