அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, மண்டலமாக மாறியுள்ளது. இது புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்னும் ஓருசில நாட்களில் தொடங்கக்கூடும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. நாட்டின் மொத்த மழைப்பொழிவில் சுமார் 75 விழுக்காடு தென்மேற்கு பருவமழையால் கிடைப்பது கவனிக்கதக்கது.