தமிழ்நாடு

சேலம், வேலூரில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

rajakannan

வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக வானூரில் 3 செமீ மழை பதிவாகியுள்ளது.அடுத்த 24 மணி நேரத்தில் வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் திருத்தணி மற்றும் வேலூரில் அதிக பட்சமாக 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

 அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை வேலூர், கரூர், மதுரை, பெரம்பலூர்  ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்ப நிலை 40 முதல் 42 டிகிரி வரை இருக்கக்கூடும் இது இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் அதிகம். சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளார்.