தமிழ்நாடு

எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் அறிவிப்பு

எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் அறிவிப்பு

webteam

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சித்திரை மாதம் வெயில் தொடங்கியுள்ளதால், அடுத்தடுத்த நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வெப்பச் சலனம் காரணமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாட்டங்களிலும், தேனி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் விருதுநகர், கரூர், மதுரை, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும் எனவும், அதிகபட்சம் 35 டிகிரி செல்சியஸ் வெயில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தென்காசியில் 7 செமீ மழை பதிவாகியுள்ளது.