தமிழ்நாடு

வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு

webteam

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சில பகுதிகள் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக வடகிழக்குப் பருவமழை பெய்துள்ளது. அத்துடன் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதில் சென்னை, நாகை, கடலூர், திருவாரூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் மக்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சில பகுதிகள் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.