தமிழ்நாடு

திருடப்பட்ட 2 கிலோ தங்க நகைகள் : பயணிகளிடம் ஒப்படைத்த ரயில்வே போலீஸ்

திருடப்பட்ட 2 கிலோ தங்க நகைகள் : பயணிகளிடம் ஒப்படைத்த ரயில்வே போலீஸ்

webteam

ரயில் பயணிகளிடமிருந்து திருடப்பட்ட 2 கிலோ தங்க நகைகள் உள்ளிட்ட பொருள்களை மீட்ட ரயில்வே போலீசார், உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

சென்னை மற்றும் திருச்சி ரயில்வே காவல் மாவட்டங்களில் 2018-19 ஆம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளில், சம்பந்தப்பட்ட தங்கநகைகள், செல்போன் உள்ளிட்டவற்றை ரயில்வே போலீசார் மீட்டுள்ளனர். இவற்றை திருடியதாக 156 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட பொருள்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, சென்னை எழும்பூரில் நடைபெற்றது. 

இதில் 257 சவரன் நகைகள், 336 செல்போன்கள், ஒரு லேப்டாப், 2 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை, 233 புகார்தாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும், சேலம், ஈரோடு ரயிலில் கொள்ளையடித்த மகாராஷ்ட்ரா சாமிலி கொள்ளைக்காரர்கள், சிங்கப்பூர் ஸ்டார் ஹோட்டல் உரிமையாளரான பிரபல ரயில் திருடன் சாகுல் ஹமீது, மயக்க மருந்து கொடுத்து கொள்ளையடிக்கும் கும்பல் உட்பட நாடு முழுவதும் சுற்றித்திரிந்த கொள்ளையர்களை கைது செய்த தனிப்படையினரை பாராட்டி சான்றிதழும் வெகுமதியும் வழங்கப்பட்டன.