ooty hill train pt desk
தமிழ்நாடு

கன மழையால் ஏற்பட்ட மண் சரிவு: 7 நாட்களுக்கு ஊட்டி மலை ரயில் சேவை ரத்து - ரயில்வே நிர்வாகம்

கனமழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவால் இன்று முதல் 7 நாட்களுக்கு ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

webteam

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து உதகைக்கு நாள்தோறும் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மலைப்பாதையில் அவ்வப்போது ஏற்படும் மண்சரிவு காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்படுவது வழக்கம். அப்படி, கடந்த 3ஆம் தேதி இரவு பெய்த கனமழையால கல்லார் ரயில் நிலையம் முதல் அடர்லி ரயில் நிலையம் வரை மலை ரயில் செல்லும் வழித்தடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

ooty hill rail

இதனால் கடந்த 4ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை மலை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. மண் சரிவு சீர்செய்யப்பட்டதை அடுத்து 8ஆம் தேதி மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கப்பட்டது. ஆனால், மீண்டும் கனமழை பெய்ததால் மலை ரயில் பாதையின் பல்வேறு இடங்களில் மண் சரிவும், மண் அரிப்பும் ஏற்பட்டது.

இதனால் இன்று முதல் வரும் 16ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாகவும், மண் சரிவு பாதிப்பு சீர் செய்யப்பட்ட பின் மலை ரயில் சேவை தொடங்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.