தமிழ்நாடு

காங்கிரஸ் காணாமல்போகும்: அமித் ஷா அதிரடி பேச்சு

காங்கிரஸ் காணாமல்போகும்: அமித் ஷா அதிரடி பேச்சு

webteam

புதுச்சேரியில் அடுத்து பாரதிய ஜனதா கூட்டணி அரசு அமைவது நிச்சயம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, " இங்கு காங்கிரஸ் அரசு தானாகவே கவிழ்ந்துவிட்டது. அதன் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்து விட்டனர். ராகுல் காந்தியின் பேச்சை நாராயணசாமி தவறாக மொழி பெயர்த்தவர். உலகிலேயே நன்றாக பொய் பேசுபவருக்கான விருதை தருவதென்றால் அதை நாராயணசாமிக்கு தான் தர வேண்டும்”  என்றார்.