தமிழ்நாடு

பண்டிகை சீசன்: முகக்கவசம் அணிவதில் கவனக்குறைவாக இருக்காதீர்கள் -ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்

பண்டிகை சீசன்: முகக்கவசம் அணிவதில் கவனக்குறைவாக இருக்காதீர்கள் -ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்

JustinDurai
பண்டிகை சீசன்கள் அடுத்தடுத்து வருவதால் மக்கள் முகக்கவசம் மற்றும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தீவிரமாகப் பின்பற்றிட வேண்டும் என மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டில் இதுவரை 33 சதவிகிதம் பேர் தடுப்பூசி போடாமல் இருப்பதாகவும், இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் நுண் செயல் திட்டத்தை வடிவமைத்து செயல்படுத்தியுள்ளதாகவும் கூறினார். சென்னையில் பெருங்குடியில் உள்ள குடிசைப் பகுதிகளில் டெங்கு உள்ளிட்ட நோய்த்தொற்றுக்கு மக்கள் ஆளாவதாகக் கூறிய ராதாகிருஷ்ணன், டெங்குவாக இருந்தாலும் கொரோனாவாக இருந்தாலும் அவற்றை குணப்படுத்தும் வல்லமை தமிழ்நாட்டு மருத்துவர்களிடம் உள்ளதாகத் தெரிவித்தார்.
திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, நாமக்கல் மாவட்டங்களில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவது சவாலாகவே இருப்பதாகக் கூறிய அவர், மக்கள் முகக்கவசம் அணிவதில் கவனக்குறைவாக இருக்கக் கூடாது என்று அறிவுறுத்தினார்.