தமிழ்நாடு

சென்னை எஸ்ஆர்எம் மருத்துவமனைக்கு நடமாடும் கிளினிக்கை நன்கொடையாக அளித்த குயிக் ஹீல்

சென்னை எஸ்ஆர்எம் மருத்துவமனைக்கு நடமாடும் கிளினிக்கை நன்கொடையாக அளித்த குயிக் ஹீல்

Sinekadhara

குயிக் ஹீல் பொதுமக்களுக்கு உற்சாகமான அடுத்த நடவடிக்கையாக ஆரோக்கிய யான் - சென்னை எஸ்ஆர்எம் மருத்துவமனைக்கு ஒரு நடமாடும் கிளினிக்கை நன்கொடையாக அளித்திருக்கிறது.

அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த 60,000-க்கும் மேற்பட்ட சமூகத்தில் மிகவும் பின்தங்கிய மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் திட்டமிட்டு, மருத்துவ வேன் இப்போது மருத்துவமனையின் தெளிவான வழிகாட்டுதலின்கீழ் செயல்படும் என்று தெரிவித்திருக்கிறது.

குயிக் ஹீல் டெக்னாலஜிஸ் லிமிடெட் சிஎஸ்ஆர் பிரிவான குயிக் ஹீல் அறக்கட்டளை, சென்னை, காட்டான்குளத்தூர், எஸ்ஆர்எம் மருத்துவமனைக்கு ஆரோக்கியா யான் வடிவில் தாராள நன்கொடையை அளித்துள்ளது. ஆரோக்யா யான் ஒரு அதிநவீன நடமாடும் மருத்துவ கிளினிக் ஆகும். தொலைதூர மண்டலங்களில் உள்ள நோயாளிகளுக்கு இவ்வசதியைக் கொண்டுசெல்ல இது வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நோயறிதல், சிகிச்சைகள், வழக்கமான பரிசோதனைகள் போன்ற சுகாதாரச் சேவைகளையும் வழங்குகிறது. இந்த அறக்கட்டளை இந்தியாவின் மிகப்பெரிய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் ஒன்றான புதிய தலைமுறை அறக்கட்டளையுடன் இணைந்து கிராமப்புறங்களில் தேவைப்படுபவர்களுக்கு மற்றும் தரமான மருத்துவச் சேவை கிடைக்காதவர்களுக்கு, கண் பரிசோதனை, பல் பராமரிப்பு, இதயநோய், தோல் நோய்கள், எலும்பு பராமரிப்பு, புற்றுநோய்த் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு போன்ற மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்கிறது.

குயிக் ஹீல் அறக்கட்டளையின் தலைவர் அனுபமா கட்கர், குயிக் ஹீல் டெக்னாலஜிஸ் லிமிடெட் எம்டி மற்றும் சிஇஓ டாக்டர் கைலாஷ் கட்கர், மருத்துவமனையின் சார்பில் டாக்டர் M.லோகராஜ், பிடி அறக்கட்டளையின் சார்பில் D.V.வெங்கடகிரி, ஆகிய சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பிரமுகர்கள் முன்னிலையில் இந்த நன்கொடை அளிப்பு விழா நடைபெற்றது. இந்த முயற்சியின் மூலம், ஆரோக்கியா யான் ஒவ்வொரு ஆண்டும் அருகிலுள்ள கிராமங்களான செட்டிபுண்ணியம், வில்லியம்பாக்கம், சாஸ்திரிப்பாக்கம், மேட்டுத்தெரு, வீராபுரம் போன்ற பகுதிகளில் 60,000-க்கும் மேற்பட்ட மக்களுக்குச் சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆரோக்கியா யான் 2021 ஜனவரியில் தொடங்கப்பட்டது. இது அடிப்படைச் சுகாதார வசதிகளை வழங்குவதன் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவர்களுக்கு ஒரு பெரிய மருத்துவ ஆதரவு அமைப்பாக செயல்படும். நோயைக் கண்டறிதல், சிகிச்சைக்கான சுத்தமான மற்றும் சுகாதாரமான சூழலை அளிக்கும் வகையில், இதனை ஒரு நடமாடும் மருத்துவமனைப் பிரிவாகவும் மாற்றலாம். மருந்துகளின் சேமிப்பு மற்றும் தடையற்ற விநியோகத்திற்கும் யான் பயன்படுத்தப்படலாம். 

குயிக் ஹீல் அறக்கட்டளையின் தலைவர் அனுபமா கட்கர், “குயிக் ஹீலில் நாங்கள் சமூகத்திற்காக எங்களால் முடிந்ததை செய்ய உறுதி கொண்டுள்ளோம். குறிப்பாக முன் எப்போதும் இல்லாத அளவில் உலகளாவிய தொற்றுநோய்க்கு எதிராக நம் நாட்டு மக்கள் ஒன்றாக எதிர்கொண்ட கொடூரமான காலத்திற்குப் பிறகு, மருத்துவ உள்கட்டமைப்பின் தரத்தை உயர்த்துவது மிகவும் முக்கியமாக ஆகியுள்ளது. இந்தச் சூழலில், எஸ்ஆர்எம் மருத்துவமனை மற்றும் பிடி அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து நாங்கள் உதவிக்கரம் நீட்டினோம். சமீபத்திய மருத்துவ உபகரணங்களுடன், ஆரோக்கியா யான் தொலைதூரத்தில் அமைந்துள்ள இடங்களையும் கிராமங்களையும்கூட அடைய முடியும். ஏழை நோயாளிகளின் போக்குவரத்து மற்றும் தகவல்தொடர்பு தேவைகளைப் பூர்த்திசெய்ய வேன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இனிமேல் அவர்கள் மோசமான மருத்துவ உள்கட்டமைப்பு அல்லது தாமதமான சிகிச்சை காரணமாக தங்கள் நோயால் பாதிக்கப்படமாட்டார்கள். நடமாடும் மருத்துவக் கிளினிக்காகவும், மருத்துவப் போக்குவரத்தாகவும் பணியாற்றுவதற்கு ஏற்றவாறு, ஆரோக்கியா யான், சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் சமூகங்களைச் சேர்ந்த ஏழை மக்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகளை எளிதாகவும் வசதியுடனும் பெற உதவும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்று கூறினார்.

புதிய தலைமுறை அறக்கட்டளையின் செயலாளர், D.V.வெங்கடகிரி, "செல்வத்தின் நோக்கம் கொடுப்பதே. இது மிகவும் உன்னதமான வாழ்க்கை. சிந்தித்து அதன்படி செயல்படுகிற, உயர்ந்த லட்சியத்திற்கு உதாரணமாகத் திகழும் சிறந்த தம்பதியர் டாக்டர் கைலாஷ் கட்கர், மேடம் அனுபமா கட்கர் ஆகியோருடன் பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சத்ரபதி சிவாஜி, லோக்மான்ய பால கங்காதர திலக் ஆகிய மாபெரும் ஆத்மாக்கள் வாழ்ந்த இடத்தில் இருந்து வந்துள்ள கட்கர்ஸ் மற்றும் அணி குயிக் ஹீல் ஆகியோருக்கு நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம்.



எஸ்ஆர்எம் மருத்துவமனை & மருத்துவக் கல்லூரி & ஆராய்ச்சி மையத்தின் டீன் டாக்டர் M. லோகராஜ், ”செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட கிராமப்புற மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தும் நிகழ்ச்சியை, தமிழ்நாடு அரசின் செங்கல்பட்டு சுகாதாரச் சேவைகள் துணை இயக்குநர் டாக்டர் B. பரணிதரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் கீழ் வரும் காட்டான்குளத்தூர், வாலாஜாபாத், உத்திரமேரூர், மதுராந்தகம் கிராமப்புற வட்டாரங்களில் அமைந்துள்ள கிராமங்களைச் சேர்ந்த சமூகங்கள் மற்றும் 60,000 மக்களுக்கு சுகாதாரப் பராமரிப்பை வழங்க இந்த நடமாடும் கிளினிக் முயற்சி உதவும்” என்றார்.

குயிக் ஹீல் அறக்கட்டளை என்பது இந்தியாவின் முன்னணி சைபர் பாதுகாப்புப் பொருட்கள் மற்றும் தீர்வுகள் நிறுவனமான குயிக் ஹீல் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் பிரிவாகும். ‘எதிர்காலத்தைப் பாதுகாப்பதை’ நோக்கி - எங்கள் பயணத்தில் ஒரு புதிய வழியைப் பட்டியலிடுவதற்கு பாதுகாப்பை எளிதாக்குவதில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைப் பெற்றுள்ளோம்.