தொழிற்சாலைகளின் கழிவுகளால் நஞ்சாகும் செம்பரம்பாக்கம் ஏரி குறித்து புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதன் எதிரொலியாக சிப்காட் தொழில்சாலைகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க பொதுப்பணித் துறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் செம்பரம்பாக்கம் ஏரி மிகவும் முக்கியமானது. காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை, 'சிப்காட்' தொழிற்பேட்டையில், 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. அந்த தொழிற்சாலைகளின் கழிவுநீர் கால்வாய்கள் வழியாக செம்பரம்பாக்கம் ஏரியில் கலக்கிறது.
மேலும், மருத்துவமனைகளின் மருத்துவ கழிவுகளும் செம்பரம்பாக்கம் ஏரிக்குள் வீசப்படுகிறது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரி நீர் கொஞ்சம், கொஞ்சமாக விஷமாக மாறி கொண்டிருப்பது குறித்து புதிய தலைமுறை பிரத்தியேக செய்தி வெளியிட்டது.
இந்நிலையில் அதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட சிப்காட் தொழிற்சாலைகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க பொதுப்பணித்துறை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் பல தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் கலந்து வருவதாக புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதையடுத்து அதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு அதன் அறிக்கையை தமிழக அரசுக்கு அனுப்பி உள்ளனர்
.