புதிய தலைமுறை வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சி pt
தமிழ்நாடு

தேனி| புதிய தலைமுறையின் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சி.. மாணவர்களின் 2 சாதனை படைப்புகள்!

தேனியில் நடைபெற்ற புதிய தலைமுறையின் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

PT WEB

மாணவ மாணவிகளிடம் ஒளிந்துள்ள திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கும், உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கும் புதிய தலைமுறை வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

அந்த வகையில் தேனியில் உள்ள CEOA பள்ளியில் திண்டுக்கல் PSNA பொறியியல் மற்றும் அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சி நடைபெற்றது. கண்காட்சியை PSNA பொறியியல் மற்றும் அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரியின் தாளாளர் பாக்கியநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

குடியிருப்புகளில் வீணாகும் மழை நீரிலிருந்து மின்சாரம்..

தேனி மாவட்டத்தில் உள்ள 25-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த க்கும் 200 க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் தங்களது அறிவியல் கண்கட்சியை காட்சிப்படுத்தினர். சென்னை போன்ற அடுக்குமாடி குடியிருப்புகளில் வீணாகும் மழை நீரில் இருந்து மின்சாரம் எடுக்கும் ஹைட்றோ எலக்ட்ரிக் பவர் பேங்க், ஸ்மார்ட் பார்க்கிங் சிஸ்டம், சமையல் செய்யும் ரோபோட் போன்ற படைப்புகள் அனைவரையும் கவர்ந்தது.

ஜூனியர் மற்றும் சீனியர் என இரண்டு பிரிகளில் நடைபெற்ற போட்டியில் சிறந்த கண்டு பிடிப்புகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

பின்னர் மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இளநிலை பிரிவில், T.M.H.N.V. Vidyalaya பள்ளியைச் சார்ந்த மாணவர்கள் தஸ்வின்.M முதல் பரிசை வென்றனர்.

மற்றும் முதுநிலை பிரிவில், அரசு மாதிரி பள்ளியை சேர்ந்த பிரகாஷ் மற்றும் சுபாஷ் முதல் பரிசை வென்றனர்.

முதல் மூன்று இடங்களை பிடித்த கண்டுபிடிப்புகளுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர். பங்கேற்ற அனைத்து மாணாக்கர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.