பள்ளி மாணவர்களின் அறிவியல் திறனை ஊக்குவிக்கும் விதமாக புதிய தலைமுறை சார்பில் கோவை பெரிய நாயக்கம்பாளையத்தில் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், 40க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்று தங்களது கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர்.
பின்னர், மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில், சீனியர் பிரிவில் இடிக்கரை அரசு உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவன் வித்யாசாகர் முதல் பரிசினை பெற்றார். ஜூனியர் பிரிவில் Nice Academy Matric பள்ளியைச் சேர்ந்த Sujai.S மற்றும் Thalha.J முதல் பரிசினை பெற்றார்.
முதல் மூன்று இடங்களைப் பிடித்த கண்டுபிடிப்புகளுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர். கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பரிசுகளை வழங்கி பாராட்டினார். பங்கேற்ற அனைத்து மாணாக்கர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.