தமிழ்நாடு

முடிந்தது புரட்டாசி.. உயர்ந்தது கறிக்கோழி விலை..

முடிந்தது புரட்டாசி.. உயர்ந்தது கறிக்கோழி விலை..

webteam

புரட்டாசி மாதம் முடிவடைந்துள்ள நிலையில் கறிக்கோழி விலை உயர்ந்து வருகிறது.

புரட்டாசி மாதத்தையொட்டி கறிக்கோழிகளின் தேவை குறைந்திருந்தது. தற்போது ஐப்பசி மாதம் தொடங்கி உள்ளதால் தேவை அதிகரித்துள்ள நிலையில் கறிக்கோழி விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ 150 ரூபாய் முதல் 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுதாகவும், இவ்விலை உயர்வு தீபாவளி பண்டிகை வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் கறிக்கோழி பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு கறிக்கோழி விலை உயிருடன் 80 ரூபாய்க்கு விற்று வந்தது. இந்நிலையில் கடந்த 12 நாட்களில் 20 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. கடந்த 11-ம் தேதி கிலோ ஒன்று 80 ரூபாயிலிருந்து 2 ருபாய் உயர்ந்து 82 ரூபாயாகவும் உயர்ந்தது, இதனை தொடர்ந்து 12 -ம் தேதி 5 ரூபாயும் 18-ம் தேதி 3 ரூபாயும் உயர்ந்தது. 19-ம் தேதி 5 ரூபாய் உயர்ந்து 95 ரூபாயாக இருந்த நிலையில், இன்றும் ரூபாயும் 5 ரூபாய் விலை உயர்ந்து கிலோ ஒன்று 100 ரூபாயாக்கு உயிருடன் விற்பனை செய்யப்படுகிறது.

விலை உயர்வு குறித்து கறிக்கோழி பண்ணையாளர்கள் கூறும்போது, கடந்த ஒரு மாதமாக புரட்டாசியை ஒட்டி அசைவ உணவு சாப்பிடுவது குறைந்திருந்ததாக தெரிவித்தார். இந்நிலையில் தற்போது ஐப்பசி தொடங்கி உள்ளதால் தேவை அதிகரித்துள்ளதாகவும், குளிர்காலம் துவங்கியுள்ளதால் கேரளாவிலும் விற்பனை அதிகரித்துள்ளதாக கூறினார். கடந்த மாதம் ரூ.70க்கு விற்கப்பட்ட கறி விலை, கிலோ 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுதாகவும், இவ்விலை உயர்வு தீபாவளி பண்டிகை வரை நீடித்து விலை மேலும் உயரும் என்றார்.