புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் ஸ்வீட் கடையின் முன்பு பொருத்தப்பட்டிருந்த எல்இடி பல்பு ஒன்றை மர்ம நபர் திருடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகே முத்து என்பவர் ஸ்வீட் மற்றும் பேக்கரி கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல் இன்று காலை உரிமையாளர் முத்து கடையை திறந்தபோது கடையின் முன் பகுதியில் இருந்த எல்இடி பல்ப் காணாமல் போயிருப்பதை பார்த்தார்.
இதனையடுத்து தனது கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை உரிமையாளர் முத்து பார்த்தபோது நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர் தனது கடையின் முன்பு மாட்டியிருந்த எல்இடி பல்பை திருடி சென்றது தெரியவந்தது. ஆனால் இதுகுறித்து முத்து காவல் நிலையத்தில் புகார் ஏதும் அளிக்கவில்லை.
இருப்பினும், மர்ம நபர் ஒருவர் ஸ்வீட் கடை முன்பு பொருத்தப்பட்டிருந்த எல்இடி பல்பை திருடும் காட்சி வெளியாகியுள்ளது.