தமிழ்நாடு

புதுக்கோட்டையில கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு

kaleelrahman

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதன் முதலாக கருப்பு பூஞ்சை நோயால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டாம் கட்ட கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனிடையே புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரையில் 8 பேர் கரும்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு திருச்சி மதுரை தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

இதுவரையில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே புதுக்கோட்டை மாவட்டத்தில் இறந்து வந்த நிலையில் இன்று கரும்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளக்கொல்லையைச் சேர்ந்த செல்வராஜ் (55) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்தார்..

இதனையடுத்து அவரது உடல் சொந்த ஊரான வெள்ளகொள்ளைக்கு கொண்டு வரப்பட்டு அறந்தாங்கி நகராட்சி பணியாளர்கள் மூலம் பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு தேவையான தடுப்பூசி கிடைக்காததால் செல்வராஜ் உயிரிழந்ததாக அவரின் உறவினர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். இச்சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.