தமிழ்நாடு

அங்கீகாரம் மறுப்பு: புதுவை நியமன எம்எல்ஏக்கள் நீதிமன்றத்தில் முறையீடு

அங்கீகாரம் மறுப்பு: புதுவை நியமன எம்எல்ஏக்கள் நீதிமன்றத்தில் முறையீடு

webteam

புதுவை சட்டப்பேரவை தலைவரின் முடிவை எதிர்த்து, மூன்று பாஜக நியமன உறுப்பினர்களும் உயர்நீதிமன்றத்தில்‌ முறையீடு செய்துள்ளனர்.

புதுவை சட்டப்பேரவைக்கு பாஜக மாநில தலைவர் சாமிநாதன் உள்பட மூன்று பேருக்கு நி‌யமன உறுப்பினர்களாக ஆளுநர் கிரண்பேடி‌ பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ‌ஆனால், உரிய விதிகள் பின்பற்றபடவில்லை‌ என பேரவை செயலாளர் அதனை நிராகரித்தார். 

இந்நிலையில் வரும் 23ம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவை தொடங்கவுள்ளது. இதையொட்டி தங்களை நிராகரித்த பேரவை செயலாளரின் நடவடிக்கைக்கு தடை விதிக்கக்கோரி, 3 பாஜக சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன்பு முறையிட்டனர். இதனை மனுவாக தாக்கல் செய்யும் பட்சத்தில் நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.